'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியானது. விமர்சன ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் இரண்டாம் பாகம் கடந்த வருடக் கடைசியிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடக் கடைசியில்தான் வெளியாகிறது.
நேற்று 'விடுதலை 2' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன் மற்றும் படத்தின் இதர கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டிற்கும் சேர்த்து மொத்தம் 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தாகச் சொன்னார். “கடைசி நாள் அன்று கூட படப்பிடிப்பை நிறுத்திக்கிறேன் என்றுதான் சொன்னேன். முடித்துக் கொள்கிறேன் என்று சொல்லவில்லை. இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருந்தது,” என்றார்.
இப்படத்திற்கான படப்பிடிப்புக்கு அதிக நாட்களை வெற்றிமாறன் எடுத்துக் கொண்டார் என்ற பேச்சு திரையுலகத்தில் இருந்தது. பீரியட் பிலிம் என்பதால் அவ்வளவு நாட்கள் என்றும் சமாதானமும் சொல்லப்பட்டது.