24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! |
சூர்யா, திஷா படானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'கங்குவா'. இப்படத்தின் ஆரம்ப அரை மணி நேரக் காட்சிகள் மிகவும் 'அறுவையாக, மொக்கையாக' இருந்ததாக படம் பார்த்த பலராலும் விமர்சிக்கப்பட்டது. இன்னும் ஏன், நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா கூட ஒரு ரசிகையாக அந்த ஆரம்பக் காட்சிகள் பலனளிக்காது, ஒலி மிகவும் இரைச்சல் என ரசிகர்கள் சொன்ன குறையை அவரும் சுட்டிக் காட்டியிருந்தார்.
இவ்வளவு விமர்சனங்கள் வந்த பிறகு தற்போது அந்த ஆரம்ப அரை மணி நேரக் காட்சிகளில் சுமார் 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் ஒலி இரைச்சல் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேரம் குறைக்கப்பட்ட, ஒலி அளவும், இரைச்சலும் குறைக்கப்பட்ட காப்பிகளுடன் மீண்டும் சென்சார் பெறப்பட்டு திரையிடும் வேலைகள் நடந்து வருகிறதாம்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் அதுவரையில் 'கங்குவா' படத்தைத் தியேட்டர்களில் தொடர்ந்து ஓட வைக்கும் முயற்சியாக இது செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். இதனிடையே, நேற்று திங்கள் கிழமை 'கங்குவா' படத்திற்கான ரசிகர்கள் வருகை மிகவும் குறைந்ததாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.