அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் பின்னணி இசையை பாடல்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவில்லை என கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை எழுந்தது. இசையமைப்பாளர் தமன், சாம் சிஎஸ், அஜனிஷ் லோகநாத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பின்னணி இசையமைக்கிறார்கள் என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் பின்னணி இசையில் தானும் பணியாற்றுவதாக தமன் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, 'புஷ்பா 2' டிரைலர் வெளியாவதற்கு முன்பாக சுமார் பத்து நாட்களாக அந்தப் படம் பற்றிய எந்த ஒரு பதிவையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தேவி ஸ்ரீ பிரசாத் தவிர்த்து வந்தார். டிரைலருக்கு அவர்தான் இசையமைத்தார் என்ற தகவலும் வெளியானது. டிரைலருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அது பற்றி பல பதிவுகளை போட்டு வருகிறார்.
அதோடு புஷ்பா 2 படக்குழுவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ள சந்திரபோஸ் அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தயாரிப்பாளர் நவீன் எர்னெனி, இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன், தேவி ஸ்ரீ பிரசாத், சந்திரபோஸ் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
இருந்தாலும் 'புஷ்பா 2' பின்னணி இசையயை யார் அமைக்கிறார்கள் என்பது குறித்து பட நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் இதுவரை வெளியிடவில்லை.