பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 80களில் நடித்த நடிகை மேனகாவின் மகள். கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாளத் திரையுலகத்தில் தயாரிப்பாளராக இருக்கிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் கீர்த்தி.
கீர்த்தி அவருடைய சிறு வயது நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரைக் காதலித்து வருகிறார். ஆண்டனி தட்டில் துபாயில் வசித்து வருகிறாராம். இருவருடைய குடும்பத்தாரும் அவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்த மாதம் இருவரது திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 11ம் தேதி கோவாவில் திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
கீர்த்தி தற்போது ஹிந்தியில் தெறி ரீமேக்கான 'பேபி ஜான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் 'ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.