ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
நயன்தாரா, தனுஷ் சர்ச்சை ஒரு பக்கம் கடந்த இரண்டு நாட்களாக மீடியாவில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. நானும் ரௌடி தான் படத்தின் சில கிளிப்புகளை நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படத்தில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. அதேசமயம் முன்னதாக வெளியான டீசரில் மூன்று நொடி காட்சிகளை பயன்படுத்தினார்கள் நயன் - விக்கி இருவரும். இன்று வெளியாகியுள்ள டாக்குமென்டரி படத்தில் 10 நொடி காட்சிகளை பயன்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே மூன்று நொடிக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்ட தனுஷ் இனி இந்த 10 நொடிக்கு எவ்வளவு கேட்பாரோ என்று தெரியவில்லை.
இது ஒரு பக்கம் இருந்தாலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ரொம்பவே கூலாக இருக்கின்றனர். இந்த டாக்குமென்டரி படம் இன்று வெளியாகியுள்ளது. அதேசமயம் இது குறித்து சமீபத்தில் வெளியான புரோமோ ஒன்றில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் அருகருகே அமர்ந்து தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி பேட்டியில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பின்பக்க கழுத்து பக்கம் லேசாக அடிக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் என்ன என்று கேட்க, நயன்தாரா ரொம்பவே கூலாக பின்னாடி கொசு அமர்ந்திருந்தது தட்டி விட்டேன் என்றார்.
உடனே விக்னேஷ் சிவன் பேட்டி எடுத்தவரிடம், “பார்த்தீர்களா.. இந்த அறைக்குள் கொசுவே வராமல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.. ஆனால் என்னை அடிப்பதற்கு என்னென்ன டெக்னிக்கை அவர் யூஸ் பண்ணுகிறார் பாருங்கள் என்று கூற நயன்தாரா அதற்கு வெட்கப்படுகிறார். உடனே விக்னேஷ் சிவன் தன் கன்னத்தை காட்டி இதோ இங்கே ஒரு கொசு உட்கார்ந்து இருக்கிறது பார் என்று சொல்ல உடனே செல்லமாக அவரது கன்னத்தில் தட்டுகிறார் நயன்தாரா. ஒரு பக்கம் பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தாலும் இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது போல இந்த சமயத்தில் இவர்களது ரொமான்டிக் பக்கமும் தற்போது இந்த புரமோ மூலம் வெளியாகி உள்ளது.