ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். அரசியலுக்கு பயணிப்பதால் இதுவே தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டார். இதில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார்.
இந்த படத்தினை அறிவிக்கும் போதே 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸாகும் என அறிவித்திருந்தனர். தற்போது கன்னட படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் 2025ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதனால் விஜய் 69வது படம் 2025 தீபாவளிக்கு தள்ளி வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.