கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் |

இசையமைப்பாளர் தேவா ஒரு காலகட்டத்தில் முன்னனி இசையமைப்பாளராக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களாக தேவா இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கொழும்புவில் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதில் 'மீசைய முறுக்கு 2' படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாக கூறியுள்ளார்.
தேவா கூறுகையில், "மீசைய முறுக்கு 2 படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை மிக அற்புதமான ஒன்று. அதில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் கூறினேன். நான் இப்போது இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு என்னால் சரியாக ஒத்துழைப்பு தர முடியாது. நேரத்திற்கு என்னால் படப்பிடிப்பிற்கு செல்ல இயலாது. மேலும், நடிக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. எனக்கு நடிக்க தெரியாது. வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். ஆனால், நான் மறந்திடுவேன்" என கூறியுள்ளார்.