ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நடிகர் தனுஷ் தற்போது ‛நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு கையோடு 'இட்லி கடை' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். 'டாவுன் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
இதன் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி, மதுரை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இட்லி கடை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தனுஷ் மற்றும் படக்குழு பாங்காக் செல்கின்றனர். அங்கு படத்தின் சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.