பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து |

அனுஷ்கா, விக்ரம் பிரபு மற்றும் பலர் நடிக்க கிரிஷ் இயக்கத்தில் நேற்று வெளியான தெலுங்குப் படம் 'காட்டி'. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். ஆனால், இங்கு படம் ஓடுவதைப் பற்றி படக்குழு கவலைப்படவில்லை. எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும், காட்சியையும் நடத்தவில்லை. ஒரு சில யு டியூப் சேனல்கள் பேட்டிகளுடன் நிறுத்திவிட்டார்கள்.
தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான அனுஷ்கா, தமிழ் நடிகரான விக்ரம் பிரபு நடித்திருந்தும் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க அவர்கள் முயலவில்லை. இதனிடையே, தெலுங்கில் பெரிய அளவில் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் அங்கு சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. படம் வெளியான இரண்டாவது நாளான இன்று எந்த ஒரு தியேட்டரிலும் ஹவுஸ்புல் ஆகவில்லை. பல தியேட்டர்களில் 25 சதவீத அளவில்தான் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
படத்திற்கான விமர்சனங்களும் குறைகளைத்தான் அதிகம் சொல்லி வந்திருக்கிறது. இந்தப் படம் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்த இயக்குனர் கிரிஷ், அனுஷ்கா, தெலுங்கு அறிமுகம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்த்த விக்ரம் பிரபு ஆகியோருக்கு இப்படம் ஏமாற்றத்தையே தந்துள்ளது.




