லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத்-அஜித் கூட்டணியில் உருவாக்கி வரும் படம் 'துணிவு'. முதல் இரண்டு படங்களை தயாரித்த போனி கபூர் தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது பற்றி ஏற்கனவே தகவல் வெளியானாலும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பியபடியே இருக்கின்றனர். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகிறது என்று உறுதி ஆகிவிட்ட சூழலில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது துவங்கியுள்ளார் இயக்குனர் வினோத். டப்பிங் ஸ்டுடியோவில் வினோத் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இதை உறுதிப்படுத்தியுள்ளது.