'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம்தான் 'புஷ்பா 2'. இப்படத்தைத் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் வினியோகம் செய்கிறது. இப்படத்தை இங்கு டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கி மொத்தமாக,. 50 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் முறையில் இப்படத்திற்கான வினியோகம் நடந்து முடிந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்.
50 கோடி வசூல் வரும் வரை அத்தொகையும், அதற்கு மேலும் கிடைக்கும் தொகையும் நேரடியாக தயாரிப்பாளருக்கு போய்ச் சேரும். படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம் எத்தனை சதவீதம் கமிஷன் கேட்டுள்ளதோ அது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வழங்கப்படும். வினியோகஸ்தருடன் தியேட்டர்காரர்கள் அவர்களுக்கான சதவீதம் எவ்வளவு போட்டிருக்கிறார்களோ அதை எடுத்துக் கொண்டு மீதித் தொகையைத்தான் வினியோகஸ்தர்களுக்குத் தருவார்கள். இதுதான் டிஸ்ட்டிரிபியூஷன் முறையிலான வியாபாரம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'புஷ்பா 2' படத்திற்கான வினியோகப் பொறுப்பை ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்றுள்ளதால் அவர்கள் அத்தொகையை வசூலித்துக் கொடுக்கும் பொறுப்பைச் செய்வார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விஜய் நடித்த 'தி கோட்' படத்தை தெலுங்கில் மைத்ரி மூவிஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. அதற்குப் பதிலாக இங்கு அவர்கள் தயாரித்துள்ள 'புஷ்பா 2' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுத் தருகிறது. அடுத்து மைத்ரி நிறுவனம் தயாரித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தையும் தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடலாம் என்றும் கோலிவுட்டில் ஒரு தகவல் சுற்றி வருகிறது.