ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து தோல்வியைத் தழுவிய படம் 'கங்குவா'. சரித்திர காலமும், இந்தக் காலமும் கலந்த படமாக வெளிவந்தது. குறிப்பிடும்படியான மேக்கிங் படத்தில் இருந்தாலும் கதையும், திரைக்கதையும் மோசமாக இருந்ததால் இப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் 2025ல் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள இந்தப் படத்தை விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மலையாளப் படமான 'தி கோட் லைப்', 'கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ்' ஆகிய படங்களும் இந்த நாமினேஷனில் பங்கு கொள்கின்றன.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தப் படங்கள் தேர்வாக அதிகப்படியான வாக்குகளைப் பெற வேண்டும். அவற்றிற்கான வாக்களிப்பு ஜனவரி 8ம் தேதி ஆரம்பமாகி 12ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் எந்தெந்த படங்கள் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது என்பதை ஜனவரி 17ம் தேதி அறிவிப்பார்கள்.