தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

பொங்கல் வெளியீட்டில் பெரிய அளவிலான மோதல் எதுவும் இல்லை. இரண்டாம் நிலை நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. இதற்கடுத்து சில மாதங்களுக்கு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் தனி வெளியீடாகத்தான் வர உள்ளது.
ஏப்ரல் 10ம் தேதியன்று தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் இருமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படமும் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. அந்தப் படமும் ஏப்ரல் 10ம் தேதிதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளிவந்தால் அன்றைய தினம் மும்முனைப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் இப்படி மூன்று படங்கள் வெளிவந்தால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
ஏப்ரல் வெளியீட்டிற்குப் பிறகு மே முதல் வாரத்தில் தான் படங்களை வெளியிட நாட்களைக் குறிப்பார்கள். ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் நடக்கும் என்பதால் அந்த மாதத்திலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராது.




