வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள 'கங்குவா' படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை மறுநாள் நவம்பர் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்பட வெளியீட்டை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் அந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய மீதித் தொகையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியது. அதனால், படத்திற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் மற்றொரு வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. பத்து வருடங்களுக்கு முன்பு அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்ற பைனான்சியரிடம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானவேல்ராஜா 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அர்ஜுன்லாலுக்கு தொழிலில் நிதி இழப்பு ஏற்பட, அவர் திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்தும் போனார்.
அவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் சொத்தாட்சியர் நிர்வகித்து வந்தார். அர்ஜுன்லாலிடமிருந்து கடன் வாங்கியவர்களிடமிருந்து அவர் பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையை எடுத்து வந்தார். அர்ஜுன்லாலுக்கு ஞானவேல்ராஜா தரவேண்டிய பணத்திற்கான 18 சதவீத வட்டியுடன் சேர்த்து 24 கோடியே 34 லட்சம் தர வேண்டும், தராத பட்சத்தில் இவர்களை திவால் ஆனவர்களாக அறிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 'தங்கலான்' பட வெளியீட்டிற்கு முன்பே உயர்நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'தங்கலான்' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியும், 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக ஒரு கோடியும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்போது உத்தரவிட்டது. அதையடுத்து ஒரு கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். அதையடுத்து 'தங்கலான்' படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னரே 'தங்கலான்' படம் வெளியானது.
ஆனால், இப்போது 'கங்குவா' வெளியீட்டிற்கு முன்பாக செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாயை செலுத்தவில்லை என மீண்டும் சொத்தாட்சியர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்குத் தர வேண்டிய 26 கோடி ரூபாயைத் தர பணமில்லை என சொல்லும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், கடந்த வாரம் ரிலையன்ஸ் நிறுவன வழக்கில் பாக்கித் தொகையை செலுத்தியுள்ளார்கள் என்ற வாதம் வைக்கப்பட்டது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கார்த்திகேயன் நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், அதை செலுத்தாமல் படத்தைத் திரையிடக் கூடாது, என உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஒரு வழக்கியில் சிக்கிய 'கங்குவா', இப்போது அடுத்த வழக்கில் சிக்கியுள்ளது. நாளைக்குள் பணத்தை செலுத்தினால் மட்டுமே 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.