ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது ஏன்? 30 ஆண்டுகள் கழித்து காரணம் சொன்ன ரஜினி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் தலையிட்ட இலங்கை அரசு | பிளாஷ்பேக்: 'சந்திரலேகா'வை தேடி அலைந்த எழுத்தாளர்கள் | அன்னை இல்லத்தில் எனக்கு எந்த உரிமையும் இல்லை: ராம்குமார் பிரமாண மனு தாக்கல் | பாவனா தயாரிக்கும் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் அனிமல் பட இசையமைப்பாளர் | போதை வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை வாபஸ் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | 'ஆலப்புழா ஜிம்கானா' படக்குழுவினரை பாராட்டிய சிவகார்த்திகேயன் | மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! |
மலையாள திரையுலகின் நடிகர் பிரித்விராஜ் தென்னிந்திய அளவில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளராகவும் மாறியவர் பின்னர் இயக்குனராகவும் மாறி மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் மோகன்லால் நடித்து வரும் லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வருகிறார். இவரது அண்ணன் இந்திரஜித்தும் மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகர் தான்.
இவர்களின் தந்தை மறைந்த நடிகர் சுகுமாரன். தாயார் மல்லிகா சுகுமாரன்.. அவரும் ஒரு நடிகை தான். கடந்த சில வருடங்களாக குறிப்பாக கணவரின் மறைவுக்கு பிறகு குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பை விட்டு ஒதுங்கிய அவர் சமீப காலமாக மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவருக்கு 70 வயது ஆகி உள்ளது. அவரது பிறந்த நாளை பிரித்விராஜ், இந்திரஜித் சகோதரர்கள் தங்களது மனைவி குழந்தைகள் சகிதமாக குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் பிரித்விராஜ், “இந்த குடும்பத்தின் இளம் உறுப்பினரான உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எப்போதுமே என்றும் 16 ஆக இருக்க வேண்டும் அம்மா” என்றும் வாழ்த்தியுள்ளார்.