பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் |
கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'தண்டேல்'. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மீனவர்கள் சமூகத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது என படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து அறிவித்துள்ளனர்.