தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்குத் திரையுலகத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 15 வருடங்களாக 100 கோடி வசூல் சாதனையைப் படைக்காமல் இருந்தார் நாக சைதன்யா. அவருக்குப் பின்னால் அறிமுகமான சில ஹீரோக்கள் கூட அந்த சாதனையை செய்துவிட்டார்கள்.
இந்நிலையில் சந்து மொன்டேட்டி இயக்கத்தில், நாகசைதன்யா, சாய் பல்லவி நடித்து பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'தண்டேல்' படம் 100 கோடி வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. நாக சைதன்யாவின் முதல் 100 கோடி படமாக இப்படம் அமைந்துள்ளது. உலக அளவில் இப்படம் 100 கோடி வசூலைப் பெற்றதை தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடி வசூலித்த நிலையில் அடுத்து அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த 'தண்டேல்' படம் 100 கோடி வசூலைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்து இரண்டு மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி.
தெலுங்கில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் 'கேம் சேஞ்ஜர், சங்கராந்திகி வஸ்துனம், டாகு மகாராஜ்,' படங்களைத் தொடர்ந்து நான்காவது 100 கோடி படமாக 'தண்டேல்' படம் அமைந்துள்ளது.