நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களான கிறிஸ் வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். 'பத்தரைமாற்று' என்கிற நெடுந்தொடரில் ஒன்றாக நடித்த போது கிறிஸ் வேணுகோபாலுக்கும் திவ்யாவுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் கிறிஸ் வேணுகோபாலின் வயதான தோற்றத்தை வைத்து இந்த வயதில் இவருக்கு திருமணம் தேவையா என பலரும் நெகட்டிவ் ஆக கமெண்டுகள் செய்து வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திவ்யா, 'நாங்கள் திருமணம் செய்தால் கமெண்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு மோசமாக வரும் என எதிர்பார்க்கவில்லை. பலர் அவரது வயதை 60 என்கின்றனர். உண்மையில் அவருக்கு வயது 49 தான். எனக்கு 40.அப்படியே அவர் வயது 60 என்றாலும் அவருடன் 40 வயதுள்ள நான் சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. நாங்கள் செக்ஸுக்காக திருமணம் செய்யவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.