ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 முந்தைய சீசன்களை போல் இல்லாமல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகளோடும், கேம்களுடனும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 28 நாட்களை கடந்துள்ள இந்த கேம் ஷோவில் இந்த வார எவிக்சனில் அன்ஷிதா வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், விஜய் சேதுபதி இந்த வாரம் எவிக்சன் கிடையாது என்று அதிரடியாக அறிவித்துவிட்டார்.
அதேசமயம் ஆறு புதிய போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைகின்றனர். முன்னாள் போட்டியாளரான சுஜா வருணேவின் கணவர் சிவாஜி தேவ் என்ற சிவக்குமார், மாடல் ரியா தியாகராஜன், நடிகர் ராணவ், வீஜே வர்ஷினி வெங்கட், பேச்சாளர் மஞ்சரி மற்றும் தமிழும் சரஸ்வதி சீரியலின் வில்லன் நடிகர் ராயன் ஆகியோர் 28ம் நாளில் என்ட்ரி கொடுத்துள்ளனர். ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் புது போட்டியாளர்கள் வருகை மேலும் ரணகளத்தை கிளப்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.