தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு | 'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு | ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்? | சிவகார்த்திகேயன் 24வது படத்தில் இணைந்த அமரன் பட பிரபலம் | அட நம்ம பொம்மியா இது? வைரலாகும் லேட்டஸ் கிளிக்ஸ் | சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன் | பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி போராட்டம் | கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா |
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான பான் இந்தியா தெலுங்குப் படம் 'தேவரா 1'. இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பும், மற்ற மாநிலங்களில் மிகச் சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் தற்போது கிடைத்துள்ள பாக்ஸ் ஆபீஸ் தகவலின் படி முதல் நாள் வசூலாக இப்படம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
தனி கதாநாயகனாக ஜுனியர் என்டிஆர் படைத்துள்ள முதல் வசூல் சாதனை இது. இதற்கு முன்பு அவர் தனி கதாநாயகனாக நடித்து 2018ல் வெளிவந்த வெளிவந்த 'அரவிந்த சமேத வீரராகவா' படம் முதல் நாள் வசூலாக 60 கோடி வசூலித்ததுதான் சாதனையாக இருந்தது. இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக ராம்சரணுடன் இணைந்து நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் முதல் நாள் வசூலாக 200 கோடிக்கும் அதிகமான வசூலித்தது.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த இரண்டாவது படம் என்ற சாதனையையும் படைத்துள்ளதாம். முதலிடத்தில் 'கல்கி 2898 ஏடி' படம் உள்ளது. இதற்கு முன்பு இரண்டாவது இடத்தில் இருந்த 'ஸ்திரீ 2' படத்தின் வசூலான 65 கோடியை இந்தப் படம் கடந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
இந்தத் தகவல்கள் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள். ஆனால், அவர்கள் யாருமே தமிழில் வெளிவந்த 'தி கோட்' படத்தின் முதல் நாள் உலக வசூலான 126 கோடியைப் பற்றி குறிப்பிடாமல் போவது ஆச்சரியமாக உள்ளது. 'தேவரா 1' அதிகாரப்பூர்வ வசூல் வந்த பிறகுதான் இது பற்றி மேலும் தெரிய வரும்.