குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு |
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த போது தமிழக கிராமங்களில் கூட மூலை முடுக்குகளில் எல்லாம் விஜயகாந்த் ரசிகர் மன்றம் இருந்தது. மண்ணின் மைந்தர் என்ற ஒரு அடையாளம் அவருக்கு அப்படியான ரசிகர்களைத் தேடிக் கொடுத்தது.
தற்போது உச்ச நடிகராக இருக்கும் விஜய் வளர வேண்டும் என்பதற்காக அவரது ஆரம்ப காலத்தில் தன் அபிமான இயக்குனரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏ சந்திரசேகரன் கேட்டுக் கொண்டதற்காக 'செந்தூரபாண்டி' படத்தில் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். அந்தப் படம் வெற்றி பெற்று விஜய்யையும் கிராமத்து ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
விஜயகாந்த் மறைந்த பின் அவரைத் திரையுலகம் நினைவு கூறி பெருமைப்படுத்த நினைத்தது. அந்த விதத்தில் விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தில் விஜயகாந்த்தை 'ஏஐ' மூலம் உருவாக்குகிறோம் என ஒரே ஒரு காட்சியில் அவரது தோற்றத்தை இடம் பெற வைத்தனர். அதையும் ஒரு முகமூடி போலக் காட்டி அந்த முகமூடியை விஜய் அணிந்து வந்ததாகக் காட்டினார்கள். அது விஜயகாந்த் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெறவில்லை. மாறாக விஜயகாந்த்தை சரியாகப் பயன்படுத்தவில்லை, பெருமைப்படுத்தவில்லை என ஒரு சாரார் குற்றம் சாட்டினார்கள்.
ஆனால், கடந்த வாரம் வெளிவந்த 'லப்பர் பந்து' படத்தில் படத்தின் கதாநாயகனாக தினேஷை, விஜயகாந்த்தின் ரசிகராகக் காட்டினர். அவரது வீட்டு வெளியே விஜயகாந்தின் உருவப் படத்தை வரைந்து வைத்தனர். அதோடு விஜயகாந்த் நடித்து இளையராஜா இசையில் வந்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' என்ற பாடலை அவ்வப்போது ஒலிக்கவிட்டனர். விஜயகாந்த் சம்பந்தப்பட்ட இந்தக் காட்சிகள் அனைத்து சென்டர் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதுதான் விஜயகாந்தைப் பெருமைப்படுத்தும் படம் என அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.
இதனால், விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே தற்போது காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.