23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் 'தி கோட்'. இப்படத்தின் ஓட்டம் ஏறக்குறைய இந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிடும். இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி நான்கு புதிய படங்கள் வெளிவருவதால் சில தியேட்டர்களில் மட்டுமே 'தி கோட்' தொடர வாய்ப்புள்ளது.
இதனிடையே, கடந்த 18 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் மூலம் கிடைத்த 'ஷேர்' தொகையும் 100 கோடியைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இத்தனை ஆண்டு கால வரலாற்றில் மூன்று படங்கள் மட்டுமே 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'லியோ, பொன்னியின் செல்வன் 1' ஆகிய படங்களை அடுத்து தற்போது 'தி கோட்' படம் அந்த சாதனையைப் புரிந்துள்ளது. அந்த மூன்றில் இரண்டு படங்கள் விஜய் படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'தி கோட்' வசூல் இந்த வாரத்தில் மொத்தமாக 450 கோடியைக் கடக்கலாம் என்பது கூடுதல் தகவல்.