காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழில் ரஜினி, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளது.
அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் கார்த்திக் சுப்பராஜ் தொடங்கியுள்ளார். அதன்படி தனது அடுத்து படத்திற்கான கதையை நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளாராம். அவருக்கு கதை பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. சூர்யா படத்தை முடித்து வந்ததும் ஜெயம் ரவி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என தெரிகிறது.