வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சமீபத்தில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். சில நடிகர்கள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மலையாள திரையுலகின் பிரபல குணசத்திர நடிகரான அலான்சியர் லே லோபஸ் என்பவர் மீது இளம் நடிகை ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து அலான்சியர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மகேஷிண்டே பிரதிகாரம் படம் மூலமாக பிரபலமானவர்களில் நடிகர் அலான்சியர் லேவும் ஒருவர். அதனை தொடர்ந்து பிசியான குணச்சித்திர நடிகராக மாறிய இவர் மீது கடந்த 2019ல் இளம் நடிகை ஒருவர், இவருடன் இணைந்து நடித்தபோது படப்பிடிப்பு சமயத்தில் தனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார் என அப்போது பிரபலமாக இருந்த மீ டூ பிரசாரம் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆரம்பத்தில் அதை நடிகர் அலான்சியர் லே மறுத்தாலும் பின்னர் ஒரு பிரபல நாளிதழ் மூலமாக சம்பந்தப்பட்ட நடிகையிடம் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டார். அத்துடன் அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த நடிகை, அலான்சியர் லே மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து புகாரில் அந்த நடிகை கூறும்போது, “கடந்த 2017ல் அலான்சியர் லேவுடன் நடித்தபோது படப்பிடிப்பில் எனக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். அது தொடர்பாக அப்போது மலையாள நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த பொதுச்செயலாளர் இடவேள பாபுவிடம் உடனடியாக இது குறித்து புகார் அளித்தேன். ஆனால் அப்போது அதை அவர்கள் பெரிதாக்க விரும்பாமல் சம்பந்தப்பட்ட நடிகர் உங்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்பார். இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டேன். அப்படி அவர் மன்னிப்பு கேட்டாலும் என் மனதில் அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் தற்போது அவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.