பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

இந்தியத் திரையுலகத்தில் அதிக வாரிசு நடிகர்களைக் கொண்ட திரையுலகம் என்றால் தெலுங்குத் திரையுலகம்தான். என்டிஆர் குடும்பம், நாகேஸ்வரராவ் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம் என அவர்களது குடும்பத்தில் பல வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தை அவர்கள்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் எப்போதுமே ஒரு சர்ச்சை உண்டு.
தற்போது என்டிஆர் குடும்பத்தில் இருந்து மற்றொரு வாரிசு நடிகர் அறிமுகமாகப் போகிறார். என்டிஆரின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமூரி தாரக ராம மோக்ஷக்ன்யா தேஜா நடிகராக அறிமுகமாக உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று அவருடைய பிறந்தநாளில் வெளியானது.
'ஹனுமான்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கத்தில் 'சிம்பா' என்ற படத்தில் மோக்ஷ் அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜுனியர் என்டிஆர் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ஜுனியர் என்டிஆர் தன்னுடைய வாழ்த்தில், “திரையுலகில் அறிமுகமாவதற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் போது, அனைத்து தெய்வீக சக்திகளும் இணைந்து தாத்தா அவர்களின் ஆசீர்வாதமும் சேர்ந்து உங்கள் மீது பொழியட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்த்திய அண்ணன் ஜுனியர் என்டிஆருக்கும் மற்றவர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் மோக்ஷ்.




