லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவர் நடிகர் சிவக்குமார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பு, ஓவியம், இலக்கியம், பேச்சாளர் என பன்முக திறமையால் திகழ்கிறவர். ஹீரோ, குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் அதில் ஜாம்பவானக தனது திறமையை நிரூபித்தவர் நடிகர் சிவகுமார். ஆனால், ஒரு காலக்கட்டத்தில் அவர் நடிப்பதையே விட்டுவிட்டார்.
அது ஏன்? என்ற கேள்விக்கு அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு டிவி சீரியல்களில் அதிகம் நடித்தேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் சம்பாதித்ததை விட சீரியலில் அதிகம் சம்பாதித்தேன். 'பாசமலர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி கணேசன் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக 2 நாட்கள் தூங்காமல் சாப்பிடமால் இருந்து நடித்தார். அதுபோல நானும் நான் நடித்த சீரியலின் ஒரு காட்சிக்காக கஷ்டப்பட்டு நடித்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு நடிகை காதலனுடன் போனில் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். நான் கோபத்துடன் உயிரைக் கொடுத்து நடிக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்டேன். அதற்கு அந்த பெண் 'இப்ப எதுக்கு சார் கத்துறீங்க? எப்படியும் இத டப்பிங் தான பேச போறீங்க' என அலட்சியமாக பேசினார். அன்று நான் இந்த நடிப்புக்கு மரியாதை இல்லை. இனி இந்த நடிப்பே வேண்டாம் என என்னை நானே செருப்பால் அடித்துக் கொண்டு முடிவெடுத்தேன்' என்று கூறியுள்ளார்.