குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
சமீபகாலமாக மலையாள திரையுலகில் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்டு வருபவர்களில் நடிகர் முகேஷும் ஒருவர். இவர் மீது நடிகை மினு முனீர் என்பவர் காவல்துறையில் அளித்த பாலியல் புகாரின் பேரில் இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது கேரளாவில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சரிதா இவரது முன்னாள் மனைவி என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவரைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு நடிகை சரிதா மனம் திறந்து அளித்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது..
“முகேஷ் உடன் எனக்கு திருமணமாகி சில காலம் கழித்து அவருக்கு வேறு வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான் அவருடன் வாழ்க்கை நடத்தினேன். நான் கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் கோபத்தில் ஒரு முறை என் வயிற்றில் எட்டி உதைத்து வாசலில் தள்ளினார். அதே கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் ஒருமுறை டின்னருக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவர் நான் மீண்டும் காரில் ஏறுவதற்குள் காரை முன்னும் பின்னுமாக நகர்த்தி என்னை ஏறவிடாமல் கீழே விழச் செய்தார். ஒருமுறை குடித்துவிட்டு அவர் வீட்டுக்கு வந்தபோது ஏன் தாமதமாக வருகிறீர்கள் என கேட்டதற்கு என் தலைமுடியை பிடித்து தரதரவென என தரையில் இழுத்துச் சென்றார்.
ஆனால் இந்த விஷயங்கள் எதுவுமே வெளியில் தெரியாதபடி நாங்கள் ஓணம் பண்டிகை போன்ற நிகழ்வுகளில் சந்தோஷமாக சிரித்தபடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது போல காட்டிக் கொண்டோம். இதற்கு இன்னொரு காரணம் முகேஷின் தந்தை. எனது தந்தை இறந்த பிறகு முகேஷின் தந்தையையே எனது தந்தையாக நினைக்க ஆரம்பித்தேன். அவர்தான் தயவுசெய்து எனது மகன் செய்யும் தவறுகளை பற்றி வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி விட வேண்டாம் என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். அவர் இறக்கும் வரை அந்த சத்தியத்தை நான் காப்பாற்றினேன். அதன்பிறகு தான் நான் அமைதியாக இருந்தால் தவறு என் மீது தான் என்பது போல சித்தரிக்கப்பட்டு விடும் என்பதற்காகவே இந்த விஷயங்களை நான் இப்போது சொல்கிறேன்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் சரிதா.
இதன் மூலம் தனக்கு மனைவி இருந்தபோதே வேறு பெண்களுடன் நடிகர் முகேஷுக்கு தொடர்பு இருந்தது வெளியே தெரிய வந்துள்ளதால் தற்போது அவர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதும், அதில் உண்மை இல்லை என்று முகேஷ் மறுத்திருப்பதும் சோஷியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.