வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நடிகைள் என்றால் சிவப்பாக அழகாக இருக்க வேண்டும், ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று இருந்த இலக்கணத்தை உடைத்து எறிந்து சினிமாவில் சாதித்தவர் சரிதா. கருப்பு நிறம், குண்டான உடம்பு இவற்றை வைத்துக் கொண்டு தனது நடிப்பால் உயரம் தொட்டவர். கே.பாலச்சந்தர் 'தப்பு தாளங்கள்' படத்தில் சரிதாவை அறிமுகப்படுத்தியபோது பாலச்சந்தரை பலரும் விமர்சனம் செய்தார்கள். அந்த படத்தில் பாலியல் தொழிலாளியாகவே வாழ்ந்தார் சரிதா.
அதன் பிறகு 140 படங்களில் நடித்த சரிதா, பாலச்சந்தரின் 22 படங்களில் நாயகியாக நடித்தார். பாலச்சந்தரின் இயக்கத்தில் அதிகம் நடித்தவர் சரிதா. தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை மையப்படுத்தி படங்கள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில் சோலோ ஹீரோயின் கதைகளில் கலக்கியவர் சரிதா. சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார், தியாகராஜன், ஜெய் சங்கர் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். வண்டி சக்கரம், நெற்றிக்கண், கீழ் வானம் சிவக்கும், தண்ணீர் தண்ணீர், புது கவிதை, அக்னி சாட்சி, மலையூர் மம்பட்டியான், உயிருள்ள வரை உஷா போன்ற படங்கள் காலத்திற்கும் அவர் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும்.
1988ல் முகேஷ் என்ற நடிகரை திருமணம் செய்து அவரோடு 23 வருடங்கள் வாழ்ந்த பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். சினிமாவிலிருந்து விலகி பல ஆண்டுகளாக தன்னுடைய மகன்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆனாலும், அவ்வப்போது படங்களில் நடிக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தில் அவரது அம்மாவாக நடித்தார். இன்று அவருக்கு 64வது பிறந்த நாள்.