லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ஷெரின். ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்தார். அதன் மூலம் 'போலீஸ் டாக்' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ஸ்டூடன்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா போன்ற படங்களில் நடித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஷெரினின் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்கிறார்கள். இதனால் ஷெரின் தாயின் பராமரிப்பிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஷெரினின் தந்தை ஒரு வாரத்திற்கு முன்பு காலமானார். ஆனால் அவர் மரணம் அடைந்தது குறித்து அவரின் குடும்பத்தினர் ஷெரினுக்கு தெரிவிக்கவில்லை. தற்போதுதான் ஷெரினுக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வேதனையை பகிர்ந்துள்ளார், “நான் உங்களை (தந்தையை) மிகவும் நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்துவிட்டீர்கள், ஆனால் இன்றுதான் எனக்கு தகவல் கிடைத்தது, அதைக்கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்தப் படம் தான் என்னிடம் உள்ளது, இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ” என பதிவிட்டுள்ளார்.