'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் |

1980களில் ஒவ்வொரு அய்யப்பன் விரதகால சீசனில் ஒரு அய்யப்பன் படமாவது வெளிவரும். அந்த வரிசையில் வந்த ஒரு படம்தான் 'நம்பினார் கெடுவதில்லை'. கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் விஜயகாந்த், பிரபு, ஜெயஸ்ரீ, சுதா சந்திரன், ஜெயமாலா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் சில காட்சிகள் சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தில் படமாக்கப்பட்டது. இதில் ஜெயஸ்ரீயும், சுதா சந்திரனும் நடனம் ஆடினார்கள். மேலும் இவர்களுடன் மனோரமா, வடிவுக்கரசி போன்ற நடிகைகளும் இந்த படப்பிடிப்பில் இருந்தனர்.
படம் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு படத்தின் இயக்குனர் மற்றும் சுதா சந்திரன் உள்ளிட்ட நடிகைகள் மீது பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். குறைந்த வயதுள்ள சுதா சந்திரன், ஜெயஸ்ரீ ஆகியோர் நடனமாடியது கோவிலின் புனிதத்தை கெடுத்துவிட்டதாக தனது வழக்கு மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நடிகையர் மற்றும் இயக்குனருக்கு தலா 1000 ரூபாய் தண்டனை கட்டணம் விதித்தது. மேலும் படப்பிடிப்புக்கு அனுமதியளித்த தேவசம் போர்டுக்கும் 7500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நடிகை மனோரமா 50 வயதை கடந்தவர் என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.




