ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா |
1954 ம் ஆண்டு வெளியான படம் 'பெண்'. எம்.வி.ராமன் இயக்கிய இந்த படத்தில் வைஜயந்திமாலா, ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, சுந்தரம் பாலச்சந்தர், சித்தூர் வி நாகையா, வி.கே. ராமசாமி, கே.என்.கமலம், கே.ஆர்.செல்லம் மற்றும் கே.சங்கரபாணி ஆகியோர் நடித்தனர். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் கதை வைஜெயந்தி மாலா, அஞ்சலி தேவி இரண்டு ஹீரோயின்களை பற்றியது. வைஜயந்தி மாலா துணிச்சலான பெண், தவறு செய்தால் ஆண்களை கூட சவுக்கால் அடிப்பவர். அதே நேரத்தில் பெரிய நடன கலைஞர், அஞ்சலி தேவி அமைதியானவர். அவரின் வாழ்க்கையில் வரும் ஒரு பெரிய பிரச்னையை வைஜயந்திமாலா எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை.
பெண்ணிய படங்களுக்கு முன்னோடி இந்த படம் என்று கூறலாம். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி மொழியில் 'லட்கி' எனவும் தெலுங்கு மொழியில் 'சங்கம்' எனவும் தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலுமே வைஜயந்திமாலா முன்னணி வேடத்தில் நடித்தார். மற்ற கேரக்டர்களில் அந்தந்த மொழி நடிகர்கள் நடித்தார்கள். இதற்கு முன் பானுமதி இதுபோன்று ஒரே படத்தில் 3 மொழிகளில் நாயகியாக நடித்திருந்தார்.