பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் எப்போது என்ன மாற்றம் நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. தலைகீழ் மாற்றங்கள் கூட சமயங்களில் நடக்கும். ஹீரோவாக நடிக்கவே மாட்டேன் என்று சொன்ன சூரி இப்போது மூன்று படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தன்னை ஹீரோ என்று சொல்லிக் கொள்ளாமல் கதையின் நாயகன் என்றுதான் சொல்லி வருகிறார். ஆனால், ரசிகர்களைப் பொறுத்தவரையில் அவர் ஹீரோதான்.
சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து 'வெண்ணிலா கபடிக் குழு' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக குறிப்பிடும்படியான படங்களில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி ஒரு வெற்றிகரமான கூட்டணியாக சில படங்களில் வலம் வந்தது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த 'விடுதலை' படத்தின் பாகம் 1 மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து இந்த வருடம் வெளிவந்த 'கருடன்' படமும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. கடந்த வாரம் வெளிவந்த 'கொட்டுக்காளி' படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்து 'விடுதலை 2' படத்தில் நடித்து வருகிறார் சூரி. இவை தவிர அவர் கதாநாயகனாக நடிக்கும் சில படங்களின் அறிவிப்பும் வந்துள்ளது.
பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'துள்ளி விளையாடு' என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், “சூரி கதாநாயகனாக நடிப்பாரா ?,” என பத்திரிகையாளர் ஒருவரது கேள்விக்கு, “வண்டி நல்லா போயிட்டிருக்குது…அதைத் தரிசுல இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்துடாதீங்க… ரோட்டுலயே போகட்டும்,” என பதிலளித்தார்.
அப்படி இருந்தவர் இப்போது வெற்றிகரமான ஹீரோ என்பது சரியான வளர்ச்சிதான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரிக்கு எமது வாழ்த்துகள்.