ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிக்கும் படத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு, அதேநேரம் அதே இடம், அட்டி, பகிரி, பெட்டிக்கடை, தமிழ் குடிமகன் படங்களை தயாரித்தவர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் படமாகி வருகிறது. சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி.376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டிகேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது; முழுவதும் வேறுபட்டது. அநியாயத்தை இவன் எதிர்கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும்.
திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன். சமுத்திரகனி கதையை நான்கு மணிநேரத்தில் படித்துவிட்டு பாராட்டினார். இப்படத்தை டிசம்பருக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.