வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
'கங்குவா'படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் சண்டைகாட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் சூர்யாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படத்தில் நடித்த சண்டை கலைஞர்கள், துணை நடிகர்கள் ஊட்டியில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 113 ரஷ்ய நாட்டு துணை நடிகர்கள், சண்டை கலைஞர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே ஓட்டலில் தங்கி இருந்த இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததும், ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். இதில் அத்தனை பேரும் டூரிஸ்ட் விசாவில் வந்திருப்பதும், இங்கு பணியாற்ற அதாவது சினிமாவில் நடிக்க உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் அனைவரையும் நீலகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் சென்றுவிட்டால் படத்தின் தொடர்ச்சி (கன்டினிவியூட்டி) பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இந்திய மற்றும் ரஷ்ய தூதரங்கள் மூலம் உரிய அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.