ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகள் மனோசித்ரா. 1982ம் ஆண்டு வெளிவந்த 'மாதுளை முத்துக்கள்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சுரேசுக்கு ஜோடியாக நடித்தார். படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார், கே.எம்.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார்.
அதன்பிறகு மனோசித்ரா, ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படத்தில் நடித்தார். தமிழ் படத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவுக்கு சென்றார். 1983-இல் “மழநிலாவு” என்ற படத்தில் பிரேம் நசீருடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பைங்கிளிக்கதா, ஈவழிமாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம்சாரிகா, உமாநிலையம், குருஜி ஒரு வாக்கு படங்களிலும், தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்றுவிடவே சிறிய இடைவெளிக்கு பிறகு தனது பெயரை 'கிருத்திகா' என்று மாற்றிக்கொண்டு 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். அதன்பிறகும் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 2002ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார்.