'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிகை, தயாரிப்பாளர் என பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் அஞ்சலி தேவி, அந்தக் காலத்திலேயே அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். சினிமாவில் அவரை 'முதலாளியம்மா' என்று தான் அழைப்பார்கள்.
தமிழில் ஏராளமான படங்களை தயாரித்த அஞ்சலி தேவி 'பூங்கோதை' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை எல்.வி.பிரசாத் இயக்கினார், நாகேஸ்வர ராவ் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் நடித்தனர். படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியானது. தெலுங்கில் படத்திற்கு 'பரதேசி' என்ற தலைப்பு வைத்திருந்தனர். எஸ்.வி.ரங்காராவ், டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், சூர்யகாந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர், 1953ம் ஆண்டு படம் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானார். அதாவது இரண்டாவது நாயகனாக நடித்தார். அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிவாஜி, அஞ்சலியை சந்தித்தும் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த வாய்ப்பு தான் இது. ஆனால் இந்த படம் வெளிவர காலதாமதம் ஆனதால் சிவாஜி நடித்த 2வது படமான பராசக்தி முதலில் வெளியாகி அதுவே முதல்படம் ஆனது. பூங்கோதை படத்திற்காக சிவாஜி வாங்கிய சம்பளம் 101 ரூபாய்.