இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடந்த 2018ம் ஆண்டு ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர். தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சரியான கதைகளை தேடி வருகிறார் ஜான்வி கபூர்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் தலையில் மொட்டை அடித்து மட்டும் நடிக்கவே மாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னால் கூட இதை நான் செய்ய மாட்டேன். காரணம் என்னுடைய அம்மா எனது நீண்ட தலைமுடிக்காக அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வார். என் தலை முடியை பராமரிப்பதில் அவர் அந்த அளவுக்கு கவனம் செலுத்தினார். அதன் காரணமாகவே நான் முதல் படத்தில் நடிப்பதற்கு எனது தலைமுடியை சிறிய அளவில் வெட்டியபோது அவர் ரொம்பவே கோபப்பட்டார். அதன் காரணமாகவே என் அம்மாவைப் போலவே நானும் எனது தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார் ஜான்வி கபூர்.