23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
தமிழில் சமீபத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தின் கூடவே, இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வந்தார். இரண்டு படங்களிலும் மாறி மாறி பணியாற்றி வந்தார். அவர் தெலுங்குப் படம் இயக்கப் போகும் போதெல்லாம் அவருடைய முன்னாள் உதவியாளர்கள், தற்போதைய இயக்குனர்கள் சிலர் 'இந்தியன் 2' படத்தை இயக்கினார்கள்.
ஷங்கர் இங்கு வந்தால் அங்கு தெலுங்குப் படத்தை அங்குள்ள அவருடைய உதவியாளர்கள் இயக்கி வந்தார்கள். தெலுங்கில் இயக்குனர்களாக இருக்கும் சிலர் ஷங்கருக்காக இரண்டாவது யூனிட் இயக்குனர்களாகப் பணியாற்றி வருகிறார்களாம். தற்போது 'கேம் சேஞ்சர்' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இரண்டாவது யூனிட் இயக்குனர் ஒருவர்தான் இயக்கி வருகிறாராம்.
'கேம் சேஞ்சர்' படத்தின் மற்ற இறுதிக் கட்டப் பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதால்தான் இப்படியான மாற்றங்களாம். 'இந்தியன் 2' படத்தின் ரிசல்ட்டை மறந்துவிட்டு ஷங்கர் 'கேம் சேஞ்சர்' படத்தில் தீவிரமாகப் பணியாற்றுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.