பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான படம் 'இந்தியன் 2'. படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியான 'டிரோல்'களும் இப்படத்தின் வசூலைப் பெரிதும் பாதித்தது. எதிர்பார்த்த தியேட்டர் வசூலும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 'இந்தியன் 3' படத்தை பெரிய அளவில் ஓட வைக்க வேண்டுமென படக்குழு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மூன்றாம் பாகத்தில் உள்ள சில காட்சிகளை மாற்றி அதற்குப் பதிலாக வேறு காட்சிகளை படமாக்கும் எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
இது சம்பந்தமாக கமல்ஹாசன், ஷங்கர் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அதற்கான செலவை தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்காமல், அந்த செலவை தான் ஏற்கிறேன் என கமல்ஹாசன் சொல்லியிருக்கிறாராம்.
'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் காப்பியை முடித்த பிறகுதான் ஷங்கர் 'இந்தியன் 3' பக்கம் வருவார் என்பதும் கோலிவுட் தகவல். இரண்டில் விட்டதை மூன்றில் பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.