பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் |
'ஈரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன். இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர். அதன்பின் “வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23,' ஆகிய படங்களையும் 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸையும் இயக்கினார்.
தற்போது 'சப்தம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இந்த வருடம் ஏப்ரல் மாதம் படத்தின் டீசரையும் வெளியிட்டார்கள். அதற்கடுத்த சில வாரங்களில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெளியீடு குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.
'சப்தம்' படத்திற்கு முன்பாக அறிவழகன் இயக்கி முடித்த 'பார்டர்' படம் சில பிரச்சனைகளால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அருண் விஜய், ஸ்டெபி பட்டேல், ரெஜினா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 2021ம் ஆண்டு இந்தப் படத்தின் டிரைலரையும் வெளியிட்டார்கள். ஆனால், இன்னமும் படம் வெளியாகவில்லை.
இதனிடையே, இப்படம் குறித்து படத்தின் இயக்குனர் அறிவழகன், “பார்டர்' படத்திற்கான ஸ்கிரிட் 2018ல் எழுதப்பட்டு, கொரோனா காலகட்டத்திற்கிடையே 2021ல் முதல் காப்பியும் ரெடியானது. அதன் பிறகு ஏராளமான 'ஸ்பை' திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன. 'பார்டர்' வெளியீட்டிற்கு முன்பாக அது போல இன்னும் பல படங்கள் வரும். எழுத்தாளர்களுக்கும், படத்தை உருவாக்குபவர்களுக்கும் இது கடினமான ஒரு உண்மை. ஆனால், 'பார்டர்' படம் நேர்மையான முயற்சியுடன், ஒரு தனித்துவமான உயிர் கொண்ட ஒரு படம் என்று நம்புகிறேன். சிறந்த வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ஏக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சற்றுநேரத்திலேயே பார்டர் படம் தொடர்பாக தான் பதிவிட்டதை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கி விட்டார் அறிவழகன்.