இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை |

வெளிமாநிலங்களில் இருந்து திடீர் திடீரென கவர்ச்சி நடிகைகள் வருவது வழக்கம். லேட்டஸ்டாக சன்னி லியோனை சொல்லலாம். அந்த வரிசையில் மும்பையில் இருந்து வந்த கவர்ச்சி நடிகை ரதி தேவி. சின்ன சின்ன படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆர்.கே.சண்முகம் இயக்கத்தில் ஜெய் கணேஷிற்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து 1979ம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'பாப்பாத்தி'. இது மும்பை சிவப்பு விளக்கு பகுதிக்கு கடத்தப்பட்ட ஒரு பெண், பின்னர் நடிகையாக ஜெயித்த கதை. இது ரதி தேவியின் உண்மை கதை என்றும் அப்போது பேசப்பட்டது.
1981ம் ஆண்டு ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் அர்ஜூன், ரவீந்தருடன் 'அந்த உறவுக்கு சாட்சி' என்ற படத்தில் நடித்திருந்தார். இதே ஆண்டு விஜயசாரதியின் இயக்கத்தில் ராஜேசுடன் 'வெளிச்சத்துக்கு வாங்க' என்ற படத்திலும் நடித்திருந்தார். 1984ம் ஆண்டு ஏ.சண்முகம் இயக்கத்தில் சிவச்சந்திரன் கதாநாயகனாகவும், இவர் கதாநாயகியாகவும் நடித்த படம் 'அந்த ஜூன் 16-ஆம் நாள்' திகில் கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தது. இதில் ரதி தேவி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன்பிறகும் ஒரு சில படங்களில் நடித்த ரதி தேவி வாய்ப்புகள் குறையவே மும்பைக்கே திரும்பிவிட்டர். பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.




