இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பார்டர்'. இப்படத்தை வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாகவும், அடுத்த மாதம் வெளியிட உள்ளோம் எனவும் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி இப்படம் வெளியாகும் என முதலில் அறிவித்தார்கள். ஆனால், அப்போது படம் வெளியாகவில்லை. அதற்குப் பிறகு இரண்டு, மூன்று முறை பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவந்து, பின்னர் வழக்கம் போல படம் வெளியாகாமல் போனது. இந்த முறையும் அது போலவே நடந்துள்ளது. அடுத்த மாதமாவது திட்டமிட்டபடி வெளியாகுமா என்பது அப்போதுதான் தெரிய வரும்.
அறிவழகன், அருண் விஜய் கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த 'குற்றம் 23' படமும், 'தமிழ் ராக்கர்ஸ்' வெப் தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், இந்த 'பார்டர்' படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தை வெளியிடாமல் தொடர்ந்து ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது படக்குழு.