'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற சண்டைக் காட்சியின் போது ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும் அவர் இறந்து போனார்.
இந்த துயர சம்பவம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் இறந்தனர். அதற்கடுத்து 'சர்தார் 2'லும் விபத்து நடந்த மரணம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஏழுமலையின் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுததை பார்த்து கார்த்தியும் கண்கலங்கினார்.