ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்த '1947 ஆகஸ்ட் 14' திரைப்படம் வெளியானது. வரலாற்று பின்னணியில் உருவான இந்த படத்தை தொடர்ந்து தற்போது கவுதம் கார்த்திக் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் 'ரூட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக பவ்யா ட்ரிக்கா நடிக்க பாலிவுட்டை சேர்ந்த அபர்சக்தி குரானா என்பவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் தான் கவுதம் கார்த்திக் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கி அதையும் விரைவாக ரூட் குழுவினர்கள் முடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




