விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

நடிகர் கார்த்திக் வீல் சேரில் அமர்ந்து செல்வது போன்ற புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இது சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தை பகிர்ந்து சமூகவலைதளங்களில் பல்வேறு யூகங்ககை பரப்பி வருகிறார்கள். இதுகுறித்து அவரது மகனும் நடிகருமான கவுதம் ராம் கார்த்திக் கூறியிருப்பதாவது: அப்பா இப்போது சினிமாவில் நடிக்காததால் அவருக்கு பல்வேறு உடல்நல பிரச்னை இருப்பதாக கற்பனையாக சிலர் பேசி வருகிறார்கள். அப்பாவுக்கு இப்போது வயதாகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் மெடிக்கல் செக்அப் செல்வது வழக்கம் தான். அப்படி செல்லும்போது அவரால் படிக்கட்டு ஏறமுடியவில்லை என்பதால் வீல்சேரில் அழைத்துச் செல்வோம். அந்த புகைப்படங்களை பகிர்ந்து அவருக்கு வேறு பிரச்னைகள் இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். அப்பா நன்றாக இருக்கிறார். இவ்வாறு கவுதம் கூறினார்.




