ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஜூலை 12) வெளியாக உள்ள படம் 'இந்தியன் 2'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் பெரிய படங்களுக்கும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அந்தந்த மாநில அரசுகள் அனுமதி அளிக்கும்.
அப்படி 'இந்தியன் 2' படத்திற்கு தெலங்கானாவில் சிங்கிள் தியேட்டர்களில் அதிகபட்சமாக 236 ரூபாயும், அதிகபட்சமாக 383 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் படக்குழுவினர் 225 மற்றும் 350 ரூபாய் கட்டணத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமே 195 ரூபாய்தான்.
தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் ஒரு படத்திற்கு இவ்வளவு கட்டணமாக என சில தெலுங்கு மீடியாக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.