இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' |
சமீபத்தில் நடைபெற்ற 2024ம் ஆண்டுக்கான 'கடார்' தெலுங்கானா அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இந்த விருதுகளில் நடிகர் துல்கர் சல்மானுக்கு 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்ததற்காக சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. ஆனால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த துல்கர் சல்மானால் இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரிலேயே சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.
இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான் கூறும்போது, “தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த இந்த காலை பொழுது மிகவும் சிறப்பாக அமைந்தது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற அருமையான மனிதர். இந்த விருது விழாவில் நான் கலந்து கொள்ள முடியாமல் போனதால் நேரிலேயே நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக அவரை சந்தித்தேன்.. அவருடன் அமர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள சினிமா உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசி அருமையான நேரத்தை செலவிட்டதற்காக அவருக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.