முழு நீள போலீஸ் வேடத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஆர்வம் | துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.
இந்நிலையில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா கூறுகையில், கங்குவா படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு(அக்., 10) வருகிறது. ரஜினியின் வேட்டையன் தீபாவளிக்கு வெளியாவதால் கங்குவா படத்தையும் அதேநாளில் வெளியிட விரும்பவில்லை. படத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இருந்தாலும் ரஜினி படத்துடன் மோதுவது சரியாக இருக்காது. அதனால் ஆயுத பூஜைக்கு கங்குவா படத்தை வெளியிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்.
தற்போதைய நிலவரப்படி ரஜினியின் வேட்டையன் படமும் ஆயுத பூஜைக்கு தான் வெளியாகும் என தெரிகிறது. ஒருவேளை ஆயுத பூஜைக்கு வேட்டையன் வந்தால் சூர்யாவின் கங்குவா தீபாவளிக்கு மாற வாய்ப்புள்ளது. அதேசமயம் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தையும் தீபாவளி ரிலீஸ் என்றுதான் கூறியுள்ளார்கள். அதனால் இப்போது திட்டமிட்டபடி இந்த படங்கள் அதே தேதியில் திரைக்கு வருமா? இல்லை வசூலை கருத்தில் கொண்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்வார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.