ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ள 'இந்தியன் 2' படம் நாளை(ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்து 'இந்தியன் 3' படமும் வெளியாக உள்ளது.
கேரளாவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 'இந்தியன் 3' படம் பற்றி ஷங்கர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'இந்தியன் 3' படம் வெளிவருவதற்கு எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “ஆறு மாதங்களுக்குள்ளாக 'இந்தியன் 3' படம் வெளிவர வாய்ப்புள்ளது. விஎப்எக்ஸ் வேலைகள் முடிந்தால், எல்லாம் நல்லபடியாக நடந்தால் நடக்கும். கூடுதலாக ஒரு தகவல் சொல்கிறேன். 'இந்தியன் 2' படத்தின் முடிவில் 'இந்தியன் 3' படத்தின் டிரைலரை நீங்கள் பார்க்கலாம்,” என்றார்.
அதனால், 'இந்தியன் 2' படம் முடிந்த பின் ரசிகர்கள் எழுந்து சென்றுவிட வேண்டாம். 'இந்தியன் 3' டிரைலரைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.