இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு, அந்தப் படத்தின் விஎப்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து அஜர்பைஜான் நாட்டிற்குச் சென்று அஜித்தை சந்தித்துள்ளார். அங்கு 'விடாமுயற்சி' படத்திற்கான படப்பிடிப்பில் இருக்கும் அஜித்தை தேடிச் சென்று வெங்கட் பிரபு சந்தித்தன் காரணம் தெரியவில்லை.
இந்த சந்திப்பு குறித்து, “இது நடந்துவிட்டது… பாகு-வில் ப்ரோமான்ஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகு.
'மங்காத்தா' படத்தின் மூலம் அஜித்திற்குப் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் வெங்கட் பிரபு. அப்படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் இன்னும் இணைந்து பணியாற்றவில்லை. ஒருவேளை 'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து நேற்று சந்தித்திருக்கவும் வாய்ப்புள்ளது.
இருவரது சந்திப்பு குறித்து ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் அள்ளித் தெரித்து வருகின்றனர்.